ALUMNI MEET PHOTOS
நண்பர்களே நலமா??? நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். நமது கல்லூரி மூலம் சென்ற மாதம் 6 ஆம் தேதி அன்று முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லூரியின் பத்தாம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா பற்றி நமது வலைத்தளத்தில் முந்தைய பதிவிலும் மற்றும் அனைவருக்கும் மின் அஞ்சலிலும் அனுப்பி இருந்தேன்.
நண்பர்களே நலமா??? நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். நமது கல்லூரி மூலம் சென்ற மாதம் 6 ஆம் தேதி அன்று முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லூரியின் பத்தாம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா பற்றி நமது வலைத்தளத்தில் முந்தைய பதிவிலும் மற்றும் அனைவருக்கும் மின் அஞ்சலிலும் அனுப்பி இருந்தேன்.
நமது வகுப்பில் இருந்து சுமார் 10 பேர் மட்டுமே வந்து இருந்தனர். மற்ற நண்பர்களுக்கு வர விருப்பம் இல்லையா அல்லது நண்பர்களை மீண்டும் பார்க்க தோன்றவில்லை போலும்!!!
பல வருடங்களுக்கு பின் நாம் சந்திக்க கிடைத்த ஒரு வாய்ப்பை பலரும் பயன்படுத் தவறி விட்டோம். விழா நடைபெற்ற அன்று விடுமுறை நாளாக (ஞாயிற்று கிழமை) இருந்தும் பலரும் வரவில்லை. மீண்டும் நாம் அனைவரும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.
இருப்பினும் நமது தோழர்கள் விஜய், ராம்கி, வைரவகுமார், தியாகராஜன், ஜாக்சன், தினேஷ் குமார் இவர்கள் மட்டும் வந்தனர். (ஆறு பேரையாவது சந்தித்த ஒரு மகிழ்ச்சி..)
நிச்சயம் நாம் அனைவரும் கல்லூரிக்கு பிறகு அனைவரயும் ஏதோ ஒரு இடத்திலோ அல்லது வேறு ஏதேனும் விழாவில் சந்தித்து இருப்போம். ஆனால் அந்த நண்பர்களை நாம் நான்கு வருடம் வாழ்ந்த வீடு , நமது கல்லூரியில் சந்திப்பது என்பது ஒரு இனிய தருணம் அல்லவா!!!
மீண்டும் அந்த வகுப்பறை, நூலகம், Auditorium மற்றும் பிள்ளையார் கோவில் , Bike Stand,College Bus Stop என அனைத்துமே நம்மால் மறக்க இயலாத ஒன்று தானே!!! இந்த இடங்களை பார்க்கும் பொது நமது நான்கு வருட கல்லூரி வாழ்கையில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மீண்டும் நினைவில் வரலாம் அல்லவா!!!
சிலர் வெகு தொலைவில் இருந்து வர இயலவில்லை அல்லது விடுமுறை இன்றி வர இயலவில்லை என்றாலும் கூட, விடுமுறை இருந்தும் அருகில் இருந்து கொண்டே பலரும் வரவில்லை என்பதே எனது வருத்தம்.....
மீண்டும் வாய்ப்பு அமைந்தால் அனைவரும் நமது வீட்டில் (கல்லூரியில்) சந்திக்கலாம்....
இதில் ALUMNI MEETING நடைபெற்ற அன்று எடுத்த சில புகைப்படங்களை இணைத்து உள்ளேன். இந்த விழாவின் பொது நமது கல்லூர்I மூலம் சில நிகழ்சிகளும் மற்றும் மத்திய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இது கல்லூரி அல்ல நாம் வாழும் வீடு!!!!
WELCOME ALUMNI
WELCOME BOARD
FUNCTION STAGE
10TH YEAR CELEBRATION
BOOK RELEASED BY CHIEF GUEST
OUR FRIENDS
(some of our friends not present in this photo)
Event -1
Event -2
Event -3
அடுத்த பதிவில் சந்திப்போம்...




