முகவுரை
என் இனிய கல்லூரி நண்பர்களே, நமது கல்லூரி நாட்களுக்கு பின் நாம் கல்லூரியை விட்டு சென்றாலும் நம் மனதில் பல நினைவுகள் என்றும் மாறாமல் நிலைத்து இருக்கும். அந்த நினைவுகள்,நிகழ்வுகள்,தருணங்கள் போன்றவற்றை நம் கல்லூரியில் நம்முடன் பயின்ற நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த வலைப்பூ தொடங்கப்பட்டு உள்ளது. என் மனதில் உள்ள சிலவற்றை நான் இங்கு எழுதுகிறேன்..
நீங்களும் உங்கள் மனதில் உள்ள கல்லூரி நினைவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள். தமிழ் அல்லது ஆங்கிலம் என எந்த மொழியில் வேண்டுமானாலும் உங்கள் நினைவுகள் மற்றும் இனிய புகைப்படங்களையும் அனுப்புங்கள். அவற்றையும் இந்த வலைப்பூவில் வெளியிடுகிறேன்.
வாருங்கள் நண்பர்களே!!! நம் கல்லூரி நினைவுகளை காலத்தால் அழியாத சுவடுகளாக பதிப்போம்!!!! அவற்றை என்றும் படித்து மகிழ்வோம்!!!