நாம் கடந்து வந்த பாதை


20/09/2004 - முதல் வருடம் - விதைத்த நாள்!
2005 - இரண்டாம் வருடம் - வளர்ந்த நாள்!
2006 - மூன்றாம் வருடம் - மலர்ந்த நாள்!
05/05/2008 - கல்லூரி சோலையில் இருந்து மலர்கள் வெளிவந்த நாள்!
01/12/2010 - மீண்டும் மலர்கள் இணைய இணையம் மூலம் ஒரு நாள்!!!



Wednesday, April 6, 2011

ALUMNI MEET PHOTOS

ALUMNI MEET PHOTOS
நண்பர்களே நலமா??? நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். நமது கல்லூரி மூலம் சென்ற மாதம் 6 ஆம் தேதி அன்று முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லூரியின் பத்தாம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா பற்றி நமது வலைத்தளத்தில் முந்தைய பதிவிலும் மற்றும் அனைவருக்கும் மின் அஞ்சலிலும் அனுப்பி இருந்தேன். 

நமது வகுப்பில் இருந்து சுமார் 10 பேர் மட்டுமே வந்து இருந்தனர். மற்ற நண்பர்களுக்கு வர விருப்பம் இல்லையா அல்லது நண்பர்களை மீண்டும் பார்க்க தோன்றவில்லை போலும்!!!


பல வருடங்களுக்கு பின் நாம் சந்திக்க கிடைத்த ஒரு வாய்ப்பை பலரும் பயன்படுத் தவறி விட்டோம். விழா நடைபெற்ற அன்று விடுமுறை நாளாக (ஞாயிற்று கிழமை) இருந்தும் பலரும் வரவில்லை. மீண்டும் நாம் அனைவரும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.

இருப்பினும் நமது தோழர்கள் விஜய், ராம்கி, வைரவகுமார், தியாகராஜன், ஜாக்சன், தினேஷ் குமார் இவர்கள் மட்டும் வந்தனர். (ஆறு பேரையாவது சந்தித்த ஒரு மகிழ்ச்சி..)

நிச்சயம் நாம் அனைவரும் கல்லூரிக்கு பிறகு அனைவரயும் தோ ஒரு இடத்திலோ அல்லது வேறு ஏதேனும் விழாவில் சந்தித்து இருப்போம். ஆனால் அந்த நண்பர்களை நாம் நான்கு வருடம் வாழ்ந்த வீடு , நமது கல்லூரியில் சந்திப்பது என்பது ஒரு இனிய தருணம் அல்லவா!!! 

மீண்டும் அந்த வகுப்பறை, நூலகம், Auditorium மற்றும் பிள்ளையார் கோவில் , Bike Stand,College Bus Stop என அனைத்துமே நம்மால் மறக்க இயலாத ஒன்று தானே!!! இந்த இடங்களை பார்க்கும் பொது நமது நான்கு வருட கல்லூரி வாழ்கையில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மீண்டும் நினைவில் வரலாம் அல்லவா!!! 

சிலர் வெகு தொலைவில் இருந்து வர இயலவில்லை அல்லது விடுமுறை இன்றி வர இயலவில்லை என்றாலும் கூட, விடுமுறை இருந்தும் அருகில் இருந்து கொண்டே  பலரும் வரவில்லை என்பதே எனது வருத்தம்..... 

மீண்டும் வாய்ப்பு அமைந்தால் அனைவரும் நமது வீட்டில் (கல்லூரியில்) சந்திக்கலாம்....

இதில் ALUMNI MEETING நடைபெற்ற அன்று எடுத்த சில புகைப்படங்களை இணைத்து உள்ளேன். இந்த விழாவின் பொது நமது கல்லூர்I மூலம் சில நிகழ்சிகளும் மற்றும் மத்திய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. 

இது கல்லூரி அல்ல நாம் வாழும் வீடு!!!!

WELCOME ALUMNI

WELCOME BOARD

FUNCTION STAGE


10TH YEAR CELEBRATION 
BOOK RELEASED BY CHIEF GUEST

OUR FRIENDS
(some of our friends not present in this photo)

Event -1

Event -2

Event -3


அடுத்த பதிவில் சந்திப்போம்...


Tuesday, February 22, 2011

ALUMNI MEETING

நண்பனை பார்த்த நேரம் மட்டும்
ஒட்டிக் கொண்டது என்ஞாபகத்தில
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்...

நண்பர்களே நலமா? நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவை மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன். எனது மகிழ்சிக்கு காரணம் நமது கல்லூரி நிர்வாகம் நீண்ட நாட்களுக்கு பிறகு முன்னால் மாணவர்கள் சந்திப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்து உள்ளது. இது நாம் அனைவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி மகிழ ஒரு இனிமையான தருணம்.

இதை எழுதும் போது இந்த பாடல் நினைவில் வருகிறது..

மரத்தில் இருந்து உதிர்ந்த பூக்கள்
மீண்டும் கிளைக்கு சென்றிடுதே....

ஆம் நண்பர்களே, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாம் சந்திக்க நமது கல்லூரி ஏற்பாடு செய்து உள்ளது.இந்த விழாவில் நமது கல்லூரியில் 2000-2010 ஆம் ஆண்டு வரை பயின்ற அனைத்து மாணவர்களும் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. (அனைவருக்கும் மகிழ்ச்சிதானே!!!)

முன்னாள் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி (ALUMNI MEETING - 2000-2010 Batch Students)
நாள்: 06/03/2011 - ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10 மணி
இடம்: சுதர்சன் பொறியியற் கல்லூரி மண்டபம் (Sudharsan Engineering College, Auditorium - Above Library Block)

விழா நடைபெறும் நாள் விடுமறை தினம் என்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறக்கச் செய்வோம்...

மீண்டும் நாம் சந்திக்க ஒரு வாய்ப்பு... Dont Miss it.....

குறிப்பு: அன்றைய தினம் அனைவருக்கும் மதிய உணவு கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்படும்.

Wednesday, December 22, 2010

Our Madam Got Award

நண்பர்களே நலமா... நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். நமக்கு மூன்றாம் ஆண்டு - ஆறாவது செமஸ்டரில் Digital Communication பாடத்திற்கு பூபதி ராணி என்ற ஆசிரியை வந்தார். அவரது வகுப்புகளும் மிக நன்றாக சென்றது. அந்த நாட்களும் மற்றும் அந்த ஆசிரியையும் உங்களுக்கு நினைவில் இருக்கும் என நினைக்கிறன்...

என்னடா இது முதல் செமஸ்டர் பதிவுகளே முடியாதே நிலையில் மூன்றாம் ஆண்டு பதிவிற்கு தாவி விட்டேனே என நினைக்க வேண்டாம்.. இந்த மகிழ்ச்சியான செய்தியை தற்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் மிக பொருத்தமாக இருக்கும்.. 

நமது ஆசிரியை பூபதி ராணி அவர்கள் "இந்தியாவின் தொழில் நுட்ப (Engineering College) கல்லூரிகளில் சிறந்த பெண் பேராசிரியை" என்ற விருதை டிசம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று சென்னையில் நடந்த விழாவில் பெற்று உள்ளார்கள் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவர்களுக்கு நமது வலைத்தளம் சார்பிலும், நண்பர்கள் சார்பிலும் பாராட்டுகளை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். நாம் இந்தியாவின் தொழில் நுட்ப (Engineering College) கல்லூரிகளில் சிறந்த பெண் பேராசிரியை என்ற விருதை பெற்ற ஆசிரியையிடம்   படித்தோம் என்பதை எண்ணி  பெருமை அடைவோம்....

செய்தி இடம் பெற்று உள்ள தளம்: http://isteonline.in/?q=node/203


அந்த தளத்தில் வந்த ஒரு பகுதி  செய்தி கீழே,

 
15. Shayesta Akhtar Memorial National Award for Best Women Engineering College Teacher instituted by Dr. Sayed Majid Ali, ISTE Executive Council Member and the Deputy Controller of Examination & Associate Professor, Electrical Engineering Dept., KIIT University, Bhubaneswar, Orissa in the memory of his late elder sister Shayesta Akhtar.
Ms. Boopathi Rani R.
Assistant Professor, ECE Dept.
Sudharsan Engineering College
Sathiyamangalam, Pudukkottai, T.N.

            நமது ஆசிரியர் பூபதி ராணி அவர்கள் விருது வாங்கும் போது எடுத்த படம்

இந்த புகைப்படம் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட தினத் தந்தி நாளிதழில் நான்காம் பக்கத்தில் வெளி வந்து உள்ளது.

Thursday, December 2, 2010

DAY ONE

நமது நான்கு வருட கல்லூரி பயணத்தின் முதல் நாள் 2004ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 20.நம் பள்ளி படிப்பிற்கு பின் கல்லூரி வாழ்வில் முதல் அடி எடுத்து வைத்த நாள் இன்று. இந்தியாவின் பல இடங்களில் இருந்து வந்த அனைவரும் ஒன்றாக சங்கமம் ஆனது நம் சுதர்சன் பொறியியல் கல்லூரி மூலமாக. அந்த நாளில் நாம் ஒருவரை ஒருவர் முன் பின் அறிந்திடாத நபர்களை சந்தித்த தருணம். நமது கல்லூரி விரிவுரையாளர்கள் மாணவர்களை அவர்களது பெற்றோருடன் ஐந்து குழுவாக பிரித்து நாம் படிக்க போகும் கல்லூரியில் ஒவ்வொரு இடமாக அழைத்து சென்றனர். பின்னர் மதியம் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுவையான மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். பின் மதியம் அனைவரும் அவரவர் வகுப்பில் சங்கமம் ஆனோம்.


நமக்கு முதல் ஆண்டு வகுப்பு ஆசிரியராக திரு.முத்து குமார சுவாமி அவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நமக்கு இரண்டாம் செமஸ்டரில் கணிதப் பாடம் எடுத்த ஆசிரியர். முதல் செமஸ்டரில் நமக்கு மொத்தம் ஆறு பாடங்கள் மற்றும் நான்கு செய்முறை வகுப்புகள்(Lab). நமக்கு ஆங்கிலம் எடுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் பெயர் ஜனார்த்தனன் (பெயர் சரியாக நினைவில்லை)மற்றும் வெற்றிச்செல்வி என்ற ஆசிரியை, கணிதத்திற்கு ஷீலா என்றவரும், வேதியியலுக்கு (Chemistry) நாராயணன் என்றவரும், இயற்பியலுக்கு (Physics)பழனியப்பன்,OM.கண்ணன் மற்றும் சாந்த குமரி என மூன்று பேரும், Fundamentals Of Computing என்ற பாடத்திற்கு செந்தில் குமார் மற்றும் அருள்(பெயர் சரியாக நினைவு இல்லை)என்ற இருவரும்,Engineering Graphics பாடத்திற்கு ஜெய் கணேஷ் என்பவரும் வந்தனர்.


நமது கல்லூரி நாட்கள் மெல்ல மெல்ல அழகாக நகர்ந்தன. அனைவரும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு பேருந்தில் வருவதில் இருந்து மாலை திரும்பும் வரை ஒவ்வொரு நிமிடமும் இனிமையை ஓடியது. இந்நாளில் சில மாணவர்கள் கல்லூரி பேருந்தில் வந்து சென்றனர்(பாலா,ராபின்,இசை,புருஷோத்தமன்)மற்றும் சிலர் எட்டாம் நம்பர் (Bus Number : 8) பேருந்திலும் (நான் உட்பட பாலசந்தர்,செந்தில் குமார்,செந்தில் குமரன்,விஜய்)தவிர மற்ற அனைவரும் மற்ற பேருந்துகளில் வந்தனர் மற்றும் கருப்பையா தன் இல்லம் கல்லூரிக்கு அருகில் இருந்ததால் சில நாட்கள் வண்டியிலும்,நடந்தும், மேலும் ஒரு சில மாணவர்கள் தொலை தூரம் காரணமாக கல்லூரி விடுதியில் தங்கி பயின்றனர்.


இன்னும் நினைவுகள் மலரும்...